வானூர்: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா பட்டானூரில், பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சி தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, ஆலோசனை குழு தலைவர் தீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிறுவனர் ராமதாஸ், சிறப்புரை ஆற்றினார்.
இதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் சாசன சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் கல்வி வேலைவாய்ப்பில் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற ரோகினி கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்திற்கு உறுப்பினரை நியமிக்க வேண்டும், அதானியின் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், 3 முறை ஏற்றப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
The post மழை, வெள்ளம் பாதித்த மக்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.