சென்னை: சென்னையில் மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் காவல்துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொது மக்கள் உடனடியாக அழைத்தால் போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து உதவுவார்கள் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.