'மழை செய்தி வந்த உடனேயே ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார்' - அமைச்சர் துரைமுருகன்

2 hours ago 2

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காட்பாடியை தொகுதி என்று நான் கருதவில்லை, அதை கோவில் என்று கருதுகிறேன். அதனால்தான் என் மக்கள் எனக்கு தொடர்ந்து ஓட்டு போடுகிறார்கள். ஓட்டு போட்டவர்கள் நமக்கு தெய்வம் போன்றவர்கள் என்ற பயம் இருக்க வேண்டும். நான் அப்படி நினைத்ததால்தான் இந்த தொகுதியில் இத்தனை முறை ஜெயித்திருக்கிறேன்.

சட்டசபையில் கலைஞர் கருணாநிதி 56 வருடங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதே நேரம், 53 வருடங்கள் சட்டசபையில் நான் உட்கார்ந்திருக்கிறேன் என்றால், காட்பாடி மக்கள்தான் அதற்கு காரணம். எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை தந்திருக்கும் மக்களுக்காக இறுதி வரை பாடுபடுவேன். அதுதான் நான் செய்யும் நன்றி.

தொலைக்காட்சிகளிலும், ரேடியோக்களிலும் மழை வரப்போகிறது, அதுவும் பயங்கரமான மழை வரப்போகிறது என்றெல்லாம் சொல்லிவிடுகிறார்கள். மழை பற்றிய செய்தி வந்த உடனேயே, எங்களை அழைத்து உடனடியாக ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார். எனவே வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறோம்."

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Read Entire Article