மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து!!

3 months ago 16

சென்னை: மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமான், மதுரை, திருச்சி, டெல்லி ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்றும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. விமான பயணிகள் பலர் பாதுகாப்பு கருதி, தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் இல்லாமல் கடந்த 3 நாட்களாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

 

The post மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து!! appeared first on Dinakaran.

Read Entire Article