மலேசியாவின் கோலாலம்பூரில் உலக தமிழர் பொருளாதார மாநாடு: வரும் 15, 16, 17ம் தேதிகளில் நடக்கிறது

6 months ago 16

சென்னை: 11வது உலக தமிழர் பொருளாதார மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் வரும் 15, 16 மற்றும் 17ம் தேதி நடக்கிறது. முதல் நாள் மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார். 17ம் தேதி நிறைவு விழாவில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு நிறைவுரை ஆற்றுகிறார். மாநாட்டில் மலேசியா உச்ச நீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம் கலந்து கொண்டு 11 பேருக்கு சாதனையாளர்கள் விருது வழங்க உள்ளார்.

மலேசிய சுகாதார அமைச்சர் டத்தேர் செரி டாக்டர் சுப்பிரமணியம், கல்வித் துறை துணை அமைச்சர் டான்செரி மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, விஜிபி நிறுவன குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பிஜிபி நிறுவன குழும தலைவர் டாக்டர் பழனி, ஜி.பெரியசாமி, பிரசிடெண்ட் நிறுவன தலைவர் அபுபக்கர் மற்றும் பல வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

3 நாள் மாநாட்டில் பன்னாட்டு வணிக தலைவர்கள், வல்லுநர்கள் உரையாட உள்ளனர். சமூக பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு வாய்ந்த அரசு பிரதிநிதிகளும், அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களும், உலகளாவிய தலைவர்களும், வணிக தலைவர்களும், தொழில்முனைவோர்களும், வல்லுநர்களும், சுயதொழில் குழுக்களும், வணிக அமைப்புகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

The post மலேசியாவின் கோலாலம்பூரில் உலக தமிழர் பொருளாதார மாநாடு: வரும் 15, 16, 17ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article