அவனியாபுரம்: மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:
நாங்கள் தேஜ கூட்டணியில் ஏற்கனவே உள்ளோம். வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக ஒளிந்து டெல்லிக்கு சென்றது யார் என்று எல்லோருக்கும் தெரியும். அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து வருகின்றனர். எதற்கான பேச்சுவார்த்தை என்று நான் பலமுறை சொல்லி வருகிறேன்.
தேஜ கூட்டணிக்கு ஆதரவாக எந்தக் கட்சி வந்தாலும் வரவேற்கத்தக்கது தான். செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்று பாஜ அமைச்சர்களை சந்தித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தவெக பொதுகுழுவில் விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். இவ்வாறு கூறினார்.
The post மறைமுகமாக ஒளிந்து டெல்லி சென்றது யார்..? டிடிவி.தினகரன் கேள்வி appeared first on Dinakaran.