ஒட்டன்சத்திரம். ஜன.14: ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொருளூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா (27) என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவர், சத்தமிட்டதால் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மர்ம நபரை மடக்கி பிடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என தெரிய வந்தது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
The post மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.