மருத்துவமனையில் இருந்து ரஜினி இன்று டிஸ்சார்ஜ்

3 months ago 24

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அவரது இதயத்தில் ரத்த நாளத்தில் ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வட்டாரம் கூறுகையில், ‘ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவமனையில் இருந்து ரஜினி இன்று டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Read Entire Article