மருது பாண்டியர்கள் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

3 months ago 15

சென்னை,

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Read Entire Article