மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

6 months ago 21

மும்பை

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read Entire Article