மராட்டியத்தில் 4 வயது சிறுவன் கடத்தல்; போலீசார் தேடுதல் வேட்டை

4 months ago 20

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பாடா பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்தியுள்ளார். வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் கவலையடைந்த குடும்பத்தினர் சிறுவனை தேடியுள்ளனர்.

ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியததால் குடும்பத்தினர் நேற்று போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சிறுவனை கடத்திய அடையாளம் தெரியாத நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Read Entire Article