மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல்

2 months ago 14

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணியில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதனால் அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கபட்டுள்ளார்.

Read Entire Article