மராட்டிய சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

2 months ago 12

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணியில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்நிலையில், 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலுடன் மொத்தம் இதுவரை 71 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

Read Entire Article