வருசநாடு, அக்.10: மயிலாடும்பாறை கிராமத்தில் நேற்று, மந்தையம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு மயிலாடும்பாறை கிராமத்தில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை கணபதிஹோமம், அனுக்கை வருணம்பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கற்பக விநாயகர் மற்றும் மந்தையம்மன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் பொன்னன்படுகை குமணன்தொழு, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புரட்டாசி மாத திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மந்தை அம்மன் கோவில் விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடும்பாறை கிராம விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post மயிலாடும்பாறையில் மந்தை அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா appeared first on Dinakaran.