மயிலாடுதுறை,செப்.30: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு சேலைகள், சேலம் பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், பரமக்குடி பகுத்தி சேலைகள், அருப்புக் கோட்டை பருத்தி சேலைகள், மதுரை பருத்தி சேலைகள், மணல்மேடு பருத்தி சேலைகள், திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை. இளவம் பஞ்சு தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரை சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2024 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.10 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.80 லட்சமும் மற்றும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.35 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின்படி (CMSS), வாடிக்கையாளர்களிடம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு 12 வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்ரமணியன், மயிலாடுதுறை தாசில்தார் விஜயராணி, மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் மதன், ரெட் கிராஸ் நிர்வாகி இளங்கோவன் மற்றும் அலுவலக ஊழியர்கள், விற்பனை நிலைய ஊழியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை appeared first on Dinakaran.