மயிலாடுதுறை, மார்ச் 25: மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்\” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து உள்ள இத்திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும், மயிலாடுதுறை வட்ட அளவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாம் நடக்க உள்ளது.
26ம் தேதி புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் தொடங்கும் உங்கைளத்தேடி, உங்கள் ஊரில் முகாமானது, 27ம் தேதி வியாழன்கிழமை காலை 09.00 மணி வரையிலும் மயிலாடுதுறை வட்ட அளவில் நடைபெறும். இந்த முகாமில் கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அங்கேேய தங்கி கள ஆய்வில் ஈடுபடுவர். மேலும் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்திடவும் உள்ளனர்.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள அடிப்படை வசதி உள்ளிட்ட, பல்வேறு குறைகள் குறித்து மனுக்களாக எழுதி, அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். தமிழ்நாடு அரசின் இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்கெடுத்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
The post மயிலாடுதுறையில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் appeared first on Dinakaran.