மயிலாடுதுறை சிறுபான்மையினருக்கான கலந்தாலோசனை கூட்டம்; 231 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் நலத்திட்ட உதவி

1 week ago 2

மயிலாடுதுறை, ஏப். 10: மயிலாடுதுறை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் ஜோ.அருண் தலைமையில் சிறுபான்மையினருக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் பணிகள், ஆணையத்தின் செயல்பாடுகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மக்கள் தொகை, மயிலாடுதுறை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மயிலாடுதுறை மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்,முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம் , கபர்ஸ்தான் அமைத்தல், கிறித்தவர், முஸ்லிம்களின் கல்லறைத்தோட்டம், கபர்ஸ்தான்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் பாதை புனரமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் திட்டம், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பொருள்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 225 பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும், 6 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும் ஆக மொத்தம் 231 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் வழங்கினார்.

கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் மாநில ஆணையத்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் சரித்திர புகழ்பெற்ற ஒரு தீரப்பை பெற்று தேசிய அளவிலேயே இந்தியாவிற்கே ஒரு தலைமையுவத்தை நிருபித்து இருக்கின்றார். உச்சநீதிமன்றம் 10 மசோதாக்களையும் ஒப்புதல் வழங்கி இன்றைக்கே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கின்றார்கள். வெற்றிகரமாக ஒவ்வொரு சிறுபான்மையினரையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் , சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், ஆணையின்படி இந்த ஆணையம் இதுவரைக்கும் 16 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தி சிறுபான்மையின மக்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்புகள், அவர்களுக்கு கொடுக்கக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்ந்தனவா.

இல்லையென்றால் அதற்கும் திரவு காணப்பட்டு, பல மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் துணையோடும், அரசு அதிகாரிகளுடனும், ஒவ்வொரு இடங்களில் பெற்ற மனுக்களில் 80 சதவீதம் அதற்கு தீர்வு கண்டுள்ளோம். இதுவரைக்கும் வந்த 689 கோரிக்கை மனுக்களில் 513 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கண்டு, அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு உரிமைகளையும், பாதுகாப்பையும், நலத்திட்டத்தையும் வழங்கி கொண்டிருக்கின்றவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லறைத்தோட்ட பிரச்சனை இருந்தது. அதற்கு இன்றே தீர்வு கண்டுள்ளோம். கல்லறை தோட்டத்திற்கு மின்சாரம், சாலை மேம்படுத்துவது தொடர்பான பிரச்சனையும் கூறினார்கள். அதற்கு தீர்வு கண்டுள்ளோம். சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் காந்த், மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் அப்துல் குத்தூஸ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், நாகூர் நஜிமுதீன், வசந்த், துணை இயக்குநர் சிறுபான்மையினர் நலம் ஷர்மிலி, மாவட்ட எஸ்பி ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை சிறுபான்மையினருக்கான கலந்தாலோசனை கூட்டம்; 231 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Read Entire Article