மயிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை..

4 months ago 15
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலத்தில் இந்த மழை அளவு பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக புயல் கரையைக் கடந்த புதுச்சேரியில் 49 சென்ட்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 30 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு ஆகும். திண்டிவனத்தில் 37 சென்ட்டிமீட்டரும், நெமூரில் 35 சென்ட்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 23 சென்ட்டிமீட்டரும், சேலம் ஏற்காட்டில் 14 சென்ட்டிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 11 சென்ட்டிமீட்டர் மழை பொழிந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Read Entire Article