மம்முட்டியின் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' டிரெய்லர் வெளியானது

17 hours ago 2

சென்னை,

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டர்போ' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து, மம்முட்டி 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாளப் படமாகும்.

இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். லீனா, சித்திக், கோகுல் சுரேஷ், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பான கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

சமீபத்தில் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை மம்முட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Presenting the Official Trailer of #DominicandTheLadiesPurse Trailer Link : https://t.co/oOghOaiVXL pic.twitter.com/00t7eoz1d8

— Mammootty (@mammukka) January 8, 2025
Read Entire Article