மனைவியை கத்தியால் குத்திய காவலர்

10 hours ago 3

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் காவலராக பணியாற்றி வருபவர் விக்னேஷ்(36). இவருக்கும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்துராஜபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி(29) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரிடம் விவாகரத்து கேட்டு தஞ்சாவூர் கோர்ட்டில் மகாலட்சுமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழ கோர்ட் அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து இருவரும் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தைகள் மகாலட்சுமியிடம் வளர்ந்து வருகின்றனர். குழந்தைகளை பார்க்க விக்னேஷ் அடிக்கடி சிவகாசி வந்து சென்றார். நேற்று முன்தினம் குழந்தைகளை பார்க்க விக்னேஷ் சிவகாசி வந்தார். அப்போது குழந்தைகளை அழைத்து வர டியூசனுக்கு சென்ற மகாலட்சுமியை வழிமறித்து விக்னேஷ் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மனைவியை கத்தியால் குத்திய காவலர் appeared first on Dinakaran.

Read Entire Article