மனைவி பிரிந்து சென்றதால் மர்ம உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

2 months ago 11

சேலம்,

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகனின் மனைவி, குழந்தைகளுடன் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவத்தன்று முருகன் வீட்டில் திடீரென கத்தியால் தனது மர்ம உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தொழிலாளி மர்ம உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article