மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஸ்கூட்டர் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

1 month ago 4

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் (திமுக) பேசுகையில், அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குழந்தைகளுடைய தாய்மார்கள், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அவர்களைக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

அவர்களை திரும்பவும் கொண்டு வந்து விடுகிறார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை இருக்கிறது. அந்த மாதிரியான தாய்மார்களுக்கு இணைப்பு பக்கவாட்டு இருக்கை கொண்ட பெட்ரோல் மற்றும் பேட்டரியால் இயக்கப்படுகின்ற ஸ்கூட்டர் வழங்கப்படுமா?. என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், புறஉலகு சிந்தனையற்றவர்கள் அதாவது ஆட்டிசம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சிக் குன்றியப் பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். முதல்வரோடு கலந்து பேசி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

The post மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஸ்கூட்டர் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article