சென்னையில், மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை, பத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கல்லூரி தோழி மூலம் அந்த மாணவிக்கு அறிமுகமான ஆண் நண்பர்கள், மாணவியின் நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு, தனியார் விடுதிகளுக்கு அவரை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.