மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு

4 months ago 27

டெல்லி,

கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துவமஸ் உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article