மத்திய மந்திரி மீதான பாதுகாப்பு அத்துமீறல் - இந்தியா கடும் கண்டனம்

3 hours ago 1

புதுடெல்லி,

இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது பயணத்தில் இங்கிலாந்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று இரவு சவுதம் ஹவுஸில் திங்க் டேங்க் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று, "உலகில் இந்தியாவின் எழுச்சியும் பங்களிப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மத்திய மந்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள், கைகளில் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியும், ஒலிப்பெருக்கிகளை வைத்து கோஷமிட்டபடியும் இருந்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலி ஒன்றில், காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், ஜெய்சங்கரின் காரின் முன்பு நின்று இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் சேதப்படுத்துவது போல் தெரிகிறது. இருப்பினும் இங்கிலாந்து காவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்த காட்சிகள் பரவி வருகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பார் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ரின் லண்டன் பயணத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்ட வீடியோக்களை நாங்களும் பார்த்தோம். இந்த பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்களின் இதுபோன்ற அத்துமீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கண்டிக்கிறோம். பேச்சுவார்த்தையை நடத்தும் நாடு அதன் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம். ஜனநாயக அரசு அளித்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் இச்செயல்,கவலை தருகிறது என்றார்.

Read Entire Article