மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம்

2 months ago 17

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி முதலில் ஆஸ்ரிரேலியாவிற்கு செல்லும் அவர், அங்குள்ள பிரிஸ்பேன் நகரில், ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடல் (FMFD) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் அந்நாட்டு மந்திரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இதன் பிறகு 8-ந்தேதி சிங்கப்பூர் செல்லும் மத்திய மந்திரி ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8-வது ஆசியான்(ASEAN) வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பின்னர் அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Read Entire Article