மத்திய பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த 2 பெண் மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

23 hours ago 1

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்காவின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது 2 பெண் மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், வயர்லெஸ் ரேடியோ கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட 2 பெண் மாவோயிஸ்டுகளும் காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்தவர்கள் என்றும், அவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.14 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்து என்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். 

Read Entire Article