சென்னை: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா -பாகிஸ்தான் மீது சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான எல்லை மாநிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் என சுமார் 244 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. தற்போது தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பதற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னையை சுற்றியுள்ள துறைமுகம், சிபிசிஎல், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களை உடனடியாக போர் நடைபெறும் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மூன்று கம்பெனிகள் ஒரு கம்பெனிக்கு 92 பேர் என மூன்று கம்பெனிக்கு 276 வீரர்கள் ரயில் மூலம் நேற்று புறப்பட்டனர். தொடர்ந்து, போர் பதற்றம் அதிகமானால் இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள பகுதியில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் தெரிவித்தார்.
The post மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 276 வீரர்கள் ரயிலில் காஷ்மீர் பயணம் appeared first on Dinakaran.