“மத்திய அரசின் நிதியை சார்ந்துள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க துரித நடவடிக்கை” - துணை முதல்வர் உதயநிதி

3 months ago 21

சென்னை: மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ள சுமார் 32,500 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா அபியான்) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

Read Entire Article