
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் திரைத்துறையினர் பற்றி தவறான செய்திகளை பரப்பி வரும் இணையதளங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலிகள் தர்மத்தை மறந்து பொய்யான கற்பனைகளை, அவதூறாக பரப்பி வருகிறார்கள் என்று குறிபிட்டுள்ளார். மேலும், அவதூறு பரப்புவர்கள் மீதும், திரைப்படங்களை பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.