மதுரையில் மழை வெள்ள பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு

2 months ago 16

மதுரை,

மதுரையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் பேரிடர், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பேரிடர் காலங்களில் பேரிடர், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநில கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண் - 1070

மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண் - 1077

மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் - 0452-2546161

வாட்ஸ் ஆப் எண் - 9655066404"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article