மதுரையில் போலீசார் அதிரடி வேட்டை

3 months ago 16

மதுரை, அக். 15: மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நடத்திய ரோந்து பணியில், கஞ்சா வியாபாரம் செய்த சோலையழகுபுரம் பிரகாஷ்(24) சிக்கினார். இதேபோல் நரிமேடு முல்லைநகரை சேர்ந்த பிரகாஷ்(24) அப்பகுதியில் கஞ்சா விற்றபோது, ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். மதுரை, செல்லூர் தாகூர் நகரை சேர்ந்த உதயக்குமார்(21), ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான்(23) ஆகியோர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை அறிந்த செல்லூர் போலீசார், அவர்களை கைது செய்தனர். அதேபோல், கஞ்சா விற்பனை செய்த செல்லூர் தினேஷ்குமார்(24), லோகேஷ்(24) ஆகியோரும் கைதாகினர். கூடல்புதூர் போலீசார் கஞ்சாவுடன் கோபிராஜா(33), முல்லைநகரை சேர்ந்த பிரவீன்(28). ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், எஸ்.கொடிக்குளத்தை சேர்ந்த நாகவேலு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, மதிச்சியம் மணிகண்டன்(32), விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த சசிக்குமார்(25), மதுரை யாகப்பாநகரை சேர்ந்த இசக்கிராஜா(29), முனிச்சாலை அருண்குமார், கீரைத்துறை லட்சுமணன்(21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். இதன்படி ஒரே நாளில் மதுரையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுரையில் போலீசார் அதிரடி வேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article