மதுரை: மதுரையில் பள்ளி, மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ( நர்சரி மற்றும் பிரைமரி/ தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை) கோடை கால விடுமுறை நாட்களில் கண்டிப்பான முறையில் செயல்படக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது. என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
The post மதுரையில் பள்ளி, மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.