மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மதுரை தனியார் பள்ளியில் நடந்த கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்ற சிறுமி, குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் ஷாலினி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அண்ணாநகர் போலீசார் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சிறுமி விளையாடியபோது எதிர்பாராதவிதமாக திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. குழந்தைகள் நடமாடும் இடத்தில் உள்ள ஆழமான தண்ணீர் தொட்டியை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக பள்ளியின் தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரையில் மழலையர் பள்ளியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
The post மதுரையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து appeared first on Dinakaran.