டெல்லி: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டக்குழுவை சேர்ந்த மகாமுனி, ஆனந்த் போஸ் ஆகியோர் ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்குழுவினர் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்தமுறை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கிஷ்ன்ரெட்டியிடம் பல்வேறு கருத்துக்களையும், கடிதத்தையும் வழங்கியிருந்தார். இதனை அடுத்து 2-வது முறையாக போராட்டக்குழுவில் இருந்து கிராம மக்கள் சுமார் 11-பேரை அழைத்துவந்து ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து பிரதமரை ஆலோசித்து நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும் என போராட்டக்குழுவினரிடம் அமைச்சர் கிஷன்ரெட்டி உறுதியளித்துள்ளார்.
The post மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து..? நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.