மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடப்பதாக புகார்.. போலி பட்டம் வாங்கிய 4 அதிகாரிகள் மீது வழக்கு..!

3 months ago 24
கடந்த 2012 முதல் 2019ஆம் ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மூலம் தமிழ் வழியில் பயின்றதாக போலியான பட்டம் பெற்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு தேர்வான 4 அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொலைதூர கல்வியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து 2020 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, காவல்துறை டிஎஸ்பி சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் சங்கீதா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காமராஜர் பல்கலைகழக தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தாமன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article