மதுரை, ஜன. 10: மதுரையை அடுத்த அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார். இதில் கலெக்டர் சங்கீதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, கலெக்டர் சங்கீதா அவரது காரில் மதுரை வந்து கொண்டிருந்தார். மாட்டுத்தாவணி அருகே, பின்னால் வந்த மற்றொரு கார், கலெக்டர் காரின் பின்பகுதியில் திடீரென மோதியது.
இதையடுத்து, அந்த காரை அப்பகுதியில் இருந்த போலீசார் மடக்கினர். விசாரணையில், அந்த கார் பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்துக்கு சொந்தமானது என்பதும் அவரது மகன் நளன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து நளன் மற்றும் அவர் ஓட்டி வந்த காரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மதுரை கலெக்டர் கார் மீது மற்றொரு வாகனம் மோதல்: வரிச்சியூர் செல்வம் மகனிடம் விசாரணை appeared first on Dinakaran.