அடகு வைக்கப்பட்டு கையாடல் செய்யப்பட்ட 40 சவரன் நகையை திருப்பித் தரக் கூறி மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை திறக்க விடாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் அடகு வைக்கப்பட்ட 11 பேரின் நகைகளை கையாடல் செய்ததாக ஊழியர் பாலசுப்பிரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், நகையை திருப்பிக் கொடுக்க எந்த நடவடிக்கையையும் கூட்டுறவு வங்கி நிர்வாகம் எடுக்கவில்லை அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.