காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரிந்து வாழும் மனைவி, மது அருந்த பணம் தராததால் விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம், வெள்ளைகுளம் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (54). கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு விமலா (44) என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேலும், புகழேந்திக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி விமலா கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புகழேந்தி, மனைவி விமலாவிடம் சென்று மது அருந்த பணம் கேட்டுள்ளார். விமலா பணம் தர மறுத்ததால் விரக்தியில் வீட்டிற்கு வந்த புகழேந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாஞ்சி போலீசார், புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மது அருந்த மனைவி பணம் தராததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.