மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் - கட்சித் தலைவர்கள் கண்டனம்

3 hours ago 3

விருதுநகர்: ​சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன் வைகோ உத்​தர​விட்​டார். தொடர்ந்து ஊடகத்​தினரை கட்​சி​யினர் தாக்​கினர். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் மதி​முக நெல்லை மண்டல செயல்​வீரர்​கள் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ உள்​ளிட்​டோர் பேசினர்.

கூட்​டத்​தில் துரை வைகோ எம்​.பி. பேசி முடித்​ததும், சென்னை செல்ல அவசர​மாகப் புறப்​பட்​டார். அவரைத் தொடர்ந்து கூட்​டத்​திலிருந்த பலரும் அரங்​கி​லிருந்து வெளி​யேறினர். தொடர்ந்​து, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ பேசும்​போதும், அரங்​கி​லிருந்த ஏராள​மானோர் வெளி​யேறினர். இதனால் ஆவேசமடைந்த வைகோ “உள்ளே வந்து உட்​காருங்​கள், இல்​லை​யெனில் வீட்​டுக்​குப் போங்​கள்” என கடிந்​து​கொண்​டார்.

Read Entire Article