மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து பற்றி ஆய்வு சிறப்பு கமிஷன் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

2 weeks ago 5

புதுடெல்லி: பவுத்தம், சீக்கியம் தவிர்த்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து அளிப்பது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு கமிஷனின் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பவுத்தம், சீக்கியம் தவிர்த்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து அளிப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, கடந்த 2022, அக். 6ல் சிறப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கு சமூக நீதி, உரிமைகள் அளிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் இந்த கமிஷன் விசாரித்து வந்தது.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான இந்த கமிஷன், பாதிக்கப்பட்ட சமூகத்தவர், சமூகவியலாளர்கள், வரலாற்று நிபுணர்கள் போன்றோருடன் கலந்தாலோசித்து தக்க முடிவுகள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த கமிஷனின் பணிகள் முடிவுபெறாத நிலையில், பணிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்நிலையில், கமிஷனின் பணிக்காலத்தை வரும், 2025, அக்டோபர் வரை நீட்டித்து, ஒன்றிய சமூக நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு, கடந்த 1ம் தேதி வெளியானது.

The post மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து பற்றி ஆய்வு சிறப்பு கமிஷன் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article