மண்மங்கலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் சிறுதானிய உணவு கண்காட்சி

1 month ago 13

கரூர், செப்.29: கரூர் மண்மங்கலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் நடந்த சிறுதானிய உணவு கண்காட்சியில் மகளிர் திட்ட அதிகாரி சீனிவாசன் கலந்துகொண்டு, தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தயார் செய்து சாப்பிடுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் தமிழகம் முழுவதும் செய்முறை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் நடைபெற்றது.

கரூர் வட்டாரம், மண்மங்கலத்தில் நடந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய குழு மூலம் ஆகியன சார்பில் ஊட்டச்சத்து, உடல்நலம், சுகாதாரம் பேணுதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினசரி உணவில் பயன்படுத்த வேண்டிய உணவு பொருட்கள் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உணவுத் திருவிழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநரும், இணை இயக்குநமான சீனிவாசன் கலந்துகொண்டு பாரம்பரிய சிறுதானியங்களின் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். உணவுத் திருவிழாவில் சிறுதானியங்கள் மூலம் இனிப்பு வகைகள், கார வகைகள் தயாரித்தல், மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சப்ஜா விதை மூலம் குளிர்பானம் தயாரித்தல், சத்தான சத்து மாவு தயாரிப்பது எப்படி என்பது குறித்தும் மகளிர் சுய உதவிக் குழுவினர் விளக்கிப் பேசினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயம்மாள் நல்லசாமி, வட்டார இயக்க மேலாளர் அனிதா வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா சுசீலா, ஊராட்சி செயலாளர் வாங்கல் சுரேஷ், மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டு தாங்கள் தயாரித்த சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்தப்பட்டு அவைகளின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மண்மங்கலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் சிறுதானிய உணவு கண்காட்சி appeared first on Dinakaran.

Read Entire Article