மண்ணச்சநல்லூரில் மாதிரி மேல்நிலைபள்ளி மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

4 months ago 13

 

சமயபுரம், பிப்.22: மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில், மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.மண்ணச்சநல்லூரில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு மண்ணச்சநல்லூரைச் சுற்றியுள்ள 35 கிராமங்களில் இருந்து சுமார் 3,600 க்கும் மேற்பட்ட மாணவிகள் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் இரண்டாவது இடமாக மாணவிகள் அதிகளவில் படிப்பது மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தான்.
இப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசெல்வன் கலந்துகொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

 

The post மண்ணச்சநல்லூரில் மாதிரி மேல்நிலைபள்ளி மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Read Entire Article