மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

2 days ago 3

நாமக்கல், மே 15: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு, வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம், கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் இருந்து, மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண்வள அட்டை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மே மாதத்திற்கு, சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து கோடைகால மற்றும் காரீப் பருவத்தில் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம். இந்த முகாம், வரும் 21ம் தேதி எருமப்பட்டி ஒன்றியம், புதுக்கோட்டை கிராமத்தில் நடைபெறுகிறது. மேலும், மற்ற வட்டார விவசாயிகள், தங்களின் மண் மாதிரிகள், நீர் மாதிரிகளை நேரடியாக மண் பரிசோதனை நிலையம், வசந்தபுரம், நாமக்கல் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையம், திருச்செங்கோட்டிலும் வழங்கி, ஆய்வு செய்து மண்வள அட்டையை பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article