மண் அரிப்பு தடுக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் 4 ஆயிரம் பனை விதை நடும் பணி: கலெக்டர் தகவல்

6 months ago 17

செம்பனார்கோயில், நவ.10: பனை மரம், தமிழகத்தின் மாநில மரமாக விளங்குகிறது. நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும், கடல் அரிப்பு மற்றும் இயற்கை பேரிடர்களில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க பனை மரங்கள் உதவியாக உள்ளன. இதனால் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் இந்திய சமாதான கூட்டமைப்பு, புவி காப்பு இயக்கம் ஆகியன சார்பில் 4 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் தலைமை வகித்தார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் கலந்து கொண்டு தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மண் அரிப்பு தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 4 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், புவிகாப்பு இயக்க நிர்வாகி இரணியன் மற்றும் பேரூராட்சி மன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

The post மண் அரிப்பு தடுக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் 4 ஆயிரம் பனை விதை நடும் பணி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article