மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர்

1 month ago 5

சென்னை,

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் 1983ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கினார். இவர் "பகல் நிலவு, மவுனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர், பொன்னியின் செல்வன்" என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் தற்போது 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து 'தக் லைப்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.'உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது' என்று கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு உத்வேகமாக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்" என கூறியுள்ளார்.

தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன். pic.twitter.com/56tMnbQpBH

— M.K.Stalin (@mkstalin) June 2, 2025
Read Entire Article