மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்தது வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என பிரியங்கா காந்தி பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்தநிலையில் அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 8ம் தேதி வயநாடு சென்றுள்ளார்.
வயநாடு சென்றுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இதனிடையே மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர். அந்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி கூறியதாவாது; மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் ராஜினாமா வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது.
வடகிழக்கு மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை தொடர்கிறது. மே 2023ல் மாநிலத்தில் இன வன்முறை வெடித்ததில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகிவிட்டனர். இந்த மோதல் போக்குக்கு இதுவரையிலும் முடிவு எட்டப்படவில்லை. என்று கூறியுள்ளார்.
The post மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா; வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா காந்தி! appeared first on Dinakaran.