மணிப்பூர்: என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

6 months ago 21

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் செய்யப்பட்ட 11 பயங்கரவாதிகளும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article