மணிப்பூரில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற காவலர் கைது

2 months ago 13

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள மோங்பங் காவல் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷாஜகான் என்பவரை, இன்று பிக்ரம்ஜித் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

இது குறித்து தகவலறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மோங்பங் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற காவலர் பிக்ரம்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொலைக்கான காரணம் குறித்து பிக்ரம்ஜித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article