மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு

2 weeks ago 3

குளச்சல், ஏப்.27: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனத்திற்கு தோட்டக்கலை துறையின் இணை இயக்குநர் ஷிலா ஜாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு ஐ.ஆர்.இ.எல். நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலை தலைவர் செல்வராஜன் ஐ.ஆர்.இ.எல். ஆலையின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறையினர், ஆலையின் செயல்பாடு மற்றும் கனிம மணல் எடுப்பது குறித்து கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் அவர்கள் ஆலையின் செயல்பாடுகளை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் மணல் எடுத்த பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு குறைந்துள்ளதை கதிர்வீச்சு அளவிட்டுக் கருவிகள் மூலம் தெரிந்து கொண்டனர். மேலும் அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு காய்பலன் கொடுப்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஐ.ஆர்.இ.எல் இயற்கை கதிர்வீச்சின் அளவை தாதுமணல் எடுப்பதன் மூலம் குறைக்கிறது என்பதை அறிந்து கொண்டோம் என்றனர்.

The post மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article